Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வியாபார சக்கரவர்த்தி , மனிதநேயர் ஹெச்.வசந்தகுமார்... ஒரு பார்வை

வியாபார சக்கரவர்த்தி , மனிதநேயர் ஹெச்.வசந்தகுமார்... ஒரு பார்வை
, சனி, 29 ஆகஸ்ட் 2020 (18:58 IST)
அந்தக் காலம் அது அது வச்ந்த் அன் கோ காலம் என்று ஒரு விளம்பரம் வரும் அந்தளவுக்கு அந்தக் காலத்திலேயே தொழில் புரட்சி செய்து அதில் வெற்றி கண்டவர் ஹெச்.வசந்த குமார்.

பிராண்ட் அம்பாசிட்டராக சினிமா, விளையாட்டு நட்சத்திரங்களை வைத்து விளம்பரங்களை எடுக்கும்போது தன்னையே நட்சத்திர பிம்பமாய்க் காட்டி, அதில் வெற்றி பெற்றவர் ஹெச். வசந்தகுமார்.

கடந்த 1950 ஆண்டு ஆகஸ் 14 ஆம் நாள்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரத்தில் பிறந்த அவர், கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தார். தமிழில்ல் தன்னம்பிக்கைப் புத்தகங்களும் அவர் நிறைய எழுதியுள்ளார்.

 இவரது அண்ணன் காங்கிரஸில் மூத்த தலைவரும்,  இலக்கியவாதியுமான குமாரி ஆனந்தன். அவரது மகள் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவார்.

உழைப்பின் சின்னமாகவும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவிலும் 83  வசந்த் அன் கோ ஷோரூம்கள் கொண்டிருந்த அவருக்கு வாடிக்கையாளர் அதிகம். அவரது மகன் வசந்த் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தமிழகத்தில் டிவி, பிரிட்ஜ், வாசிங்மெசின் போன்ற மக்கள் வீட்டு உபயோகப் பொருட்களை தவணைமுறையில் அவருக்கு கொடுத்து மாதா மாதம் கட்டுமாறு கூறிய திட்டமே அவருக்கு வெற்றிக்குக் காரணம். வியாபாரத்தில் மட்டும் நில்லாது மக்களுக்காக கன்னியாகுமரி தொகுதியில் நின்று எம்பியாகப் பொறுப்பேற்று மக்கள் தொண்டாற்றி வந்தவர் கொரோனாவால உயிரிழந்தது  தமிழகத்திற்கே பெரும் இழப்புதான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 6,352 பேருக்கு கொரோனா உறுதி ! 87 பேர் பலி !