ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 26 பேர் பலி... பலர் காயம்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:49 IST)
இந்தோனேஷியா நாட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மலையில் இருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியா சுமத்ரா மாகாணம் பெங்க்குலுவில் இருந்து, பெலம்பான்க் என்ற இடத்தை நோக்கி 49 பயணிகளுடன் ஒரு பேருந்து, நேற்று இரவில் மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்தது.
 
அப்போது, பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த ஆற்றுக்குள் கவிந்தது.
 
இந்த விபத்தில், 26 பேர் பலியானதாகவும், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
இவ்விபத்து குறித்து தெரிந்த மீட்புப் படையினர் வந்து, மீட்புப் பணியில் ஈடுபடுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

கல்வி துறைக்கு படித்த அமைச்சர் வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாற வாய்ப்பு உண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments