கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவின் பேருந்தில் நேற்று காலை திமுக எம்பி கனிமொழி பயணம் செய்த நிலையில் மதியம் ஷர்மிளா வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அவருக்கும் நடத்தினருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஷர்மிளா வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக ஒரு கருத்தும் வேலையிலிருந்து தானே ராஜினாமா செய்து விட்டதாக ஒரு கருத்தும் பரவி வருகிறது.
இந்த நிலையில் வேலை இழந்த ஷார்மிளாவுக்கு வேறு வேலை வாங்கி தருவதாக கனிமொழி எம்பி உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு ஷர்மிளாவை தான் வேலையிலிருந்து நீக்கவில்லை என்றும் நடத்துனருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அவரே வேலையிலிருந்து ராஜினாமா செய்து விட்டார் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஷர்மிளா விரும்பினால் மீண்டும் தனது பேருந்தில் தாராளமாக வேலைக்கு சேரலாம் என்றும் அவருக்கு அழைப்பு விடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பேருந்து உரிமையாளரின் அழைப்பை ஏற்று மீண்டும் வேலையில் சேர்வாரா? அல்லது கனிமொழி வாங்கி கொடுக்கும் புதிய வேலையில் சேருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.