கனிமொழி பயணம் செய்த பேருந்தின் பெண் ஓட்டுனர் வேலையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு வேறு வேலை வாங்கித் தருவதாக கனிமொழி உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இன்று காலை கோவையில் பெண் ஓட்டுனர் ஷர்மிளா என்பவரின் பேருந்தில் கனிமொழி எம்பி பயணம் செய்தார். இந்த நிலையில் பெண் ஓட்டுனருக்கும் பெண் நடத்துனருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து ஓட்டுனர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தான் பணியில் இருந்து நீக்கவில்லை என்றும் ஷர்மிளா தானாகவே பணியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டார் என்றும் பேருந்தின் உரிமையாளர் பேட்டி அளித்திருந்தார்.
இந்த நிலையில் தன்னால் ஓட்டுநரின் வேலை பறிபோனதை அடுத்து அவரிடம் தொலைபேசியில் பேசிய கனிமொழி வேறு வேலை வாங்கித் தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. விரைவில் கனிமொழி, ஷர்மிளாவுக்கு புதிய வேலை வாங்கித் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது