பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட போதிலும் தன்னை நம்பி வந்த பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்த பேருந்து ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
புதுக்கோட்டையில் அரசு பேருந்து ஓட்டு சென்ற ஓட்டுனர் வீரமணி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர் புத்திசாலித்தனமாக பேருந்து நிறுத்தி பயணிகளை காப்பாற்றி உள்ளார்.
முதல் முறை நெஞ்சுவலி ஏற்பட்ட போது மருந்தகத்தில் மருந்து வாங்கி சாப்பிட்டு விட்டு மீண்டும் பேருந்தை அவர் இயக்கிய நிலையில் சில மணி நேரத்தில் மீண்டும் நெஞ்சுலி ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் பேருந்து ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகளை வேறு பேருந்தில் செல்லுமாறு கூறிவிட்டு அவரே நேராக மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்து கொண்டார் அவருக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.