வங்க கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா அருகே மையம் கொண்டு நிற்கும் நிலையில் தென் தமிழக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான புரெவி புயல் வலுவடைந்து நேற்று இலங்கையின் திரிகோண மலை அருகே கரையை கடந்தது. தற்போது மன்னார் வளைகுடா அருகே மையம் கொண்டுள்ள புரெவி நகராமல் நிலை கொண்டிருப்பதால் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று பாம்பன் – கன்னியாக்குமரி இடையே புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், மின் கம்பங்களை தொடுதல், மரங்களுக்கு அருகே ஒதுங்குதல் போன்றவற்றை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.