சீறி வந்த காளைகள்; சிதறி ஓடிய அமமுக தொண்டர்கள்! – புதுக்கோட்டையில் பரபரப்பு

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (12:42 IST)
புதுக்கோட்டையில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் காளைகள் புகுந்ததால் பரபரப்பு எழுந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் அமமுக பிரச்சார பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் மக்கள் முன்பு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஏராளமான அமமுகவினர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இரு காளை மாடுகள் மக்கள் கூட்டத்தில் நுழைந்தன. சுற்றிலும் மக்கள் இருந்ததால் மிரட்சியடைந்த அவை கொம்புகளை காட்டி அச்சுறுத்தியவாறே நகர்ந்து சென்றன, இதனால் பதட்டமடைந்த அமமுகவினர் மற்றும் மக்கள் நாலா திசைகளிலும் சிதறி ஓடினர். இதனால் சில நிமிடங்கள் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments