Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நன்றாக வேலை செய்ததால் சக ஊழியரை கொலை செய்த கட்டிட தொழிலாளர்கள்!

Advertiesment
murder
, செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (14:50 IST)
கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் நன்றாக வேலை செய்த கட்டிட தொழிலாளி ஒருவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையை அடுத்த வேளச்சேரி என்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் கட்டிட வேலை செய்து வந்தார்கள். அப்போது ஆனந்தன் என்ற கட்டிட தொழிலாளி மட்டும் நன்றாக வேலை செய்ததால் அவரை மேஸ்திரி பாராட்டியதோடு அவ்வப்போது கூடுதலாக அவருக்கு பணம் கொடுத்து வந்தார். 
 
ஆனால் அதே நேரத்தில் சரியாக வேலை செய்யாத மற்றவர்களை கண்டித்து வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ஆனந்தனை மற்ற கட்டிட தொழிலாளர்கள் திட்டி உள்ளனர். நீ நன்றாக வேலை செய்வதால் நாங்கள் திட்டு வாங்குகிறோம் என்றும், நீயும் எங்களை போல் வேலை செய் என்றும் கூறியுள்ளனர்.
 
இந்த நிலையில் சம்பவத்தன்று மாடியில் மது அருந்த ஆனந்தனை சக்திவேல் பிரசாந்த் சீனிவாசன் உள்ளிட்டோர் அழைத்து அழைத்தனர். மது அருந்திய போது கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து ஆனந்தனை கீழே தள்ளி கொலை செய்துவிட்டு மதுபோதையில் கீழே விழுந்ததாக நாடகமாடினார்கள். ஆனால் போலீஸ் விசாரணையில் இது கொலை என தெரிய வந்ததை அடுத்து நாடகமாடிய கட்டிட தொழிலாளிகள் சக்திவேல் , பிரசாந்த், சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Free fire விளையாட்டு வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது- நீதிபதிகள் கருத்து