நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு மாயமாய் மறைந்துவிட்ட சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது. இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை சேர்ந்த மாயாண்டி என்பவர், குற்ற வழக்குகள் தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது, திடீரென காரில் வந்த நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து, அதே காரில் தப்பி ஓடிவிட்டனர்.
கொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் பாதுகாப்பை மீறி, நீதிமன்ற வளாகத்திலேயே இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை தொடர்பாக ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முன் பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் காரணமாக நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.