சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான மொத்த வியாபார பூக்கடைகளை CMDA அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயம்பேடு மார்க்கெட் தவிர சென்னையில் வேறு எங்கும் மொத்த பூ வியாபாரம் செய்யப்படக் கூடாதென வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. வழக்கு நிலுவையில் உள்ளதால் வியாபாரிகள் வழக்கம்போல அங்கு வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக உஅய்ர்நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன் கடைகளை காலி செய்ய சொல்லி உத்தரவிட்டது.
ஆனால் வியாபாரிகள் இது சம்மந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி தொடர்ந்து வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் உயர்நீதி மன்றம் இதைக் கண்டித்து, வழக்கு நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாது எனக்கூறி கடைகளை மூட 2 நாள் அவகாசம் கொடுத்தது.
2 நாட்களுக்குப் பின்னரும் கடைகளை மூடாததால் தற்போது சென்னை பெருநகர வளர்ச்சிக்கழக அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகளை மூடி தற்போது சீல் வைத்து வருகின்றனர்.