Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரட்டை இலை சின்னத்தை பெற 50 லட்சம் லஞ்சம்: சசிகலா தரப்பு இடைத்தரகர் அதிரடி கைது!

இரட்டை இலை சின்னத்தை பெற 50 லட்சம் லஞ்சம்: சசிகலா தரப்பு இடைத்தரகர் அதிரடி கைது!

இரட்டை இலை சின்னத்தை பெற 50 லட்சம் லஞ்சம்: சசிகலா தரப்பு இடைத்தரகர் அதிரடி கைது!
, திங்கள், 17 ஏப்ரல் 2017 (09:18 IST)
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டது. இதனையடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பினரும் மல்லுக்கட்டியதை அடுத்து அந்த சின்னம் தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கப்பட்டது.


 
 
ஆர்கே நகர் தேர்தலின் போது இரு தர்ப்பினரும் தங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. ஆனால் அப்போது விசாரிக்க குறுகிய காலம் மட்டுமே இருந்ததால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை தற்காலிகமக முடக்கிவிட்டு, தொப்பி சின்னத்தை சசிகலா அணிக்கும், இரட்டை மின்கம்பம் சின்னத்தை ஓபிஎஸ் தரப்புக்கும் ஒதுக்கியது.
 
இந்நிலையில் பணப்பட்டுவாடா காரணமாக ஆர்கே நகர் தேர்தலே நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் இரட்டை சின்னத்தை மீட்க நடவடிக்கையில் இறங்கியது. இரட்டை சின்னம் குறித்து விளக்கம் அளிக்க தங்களுக்கு 8 வார கால அவகாசம் வேண்டும் என சசிகலா தரப்பு தேர்தல் ஆணையத்தில் கூறியது.
 
ஆனால் தற்போது சசிகலா தரப்பு இடைத்தரகர் மூலமாக குறுக்கு வழியில் இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சித்தது தற்போது அம்பலமாகியுள்ளது. 50 லட்சம் ரூபாய் பணத்தை இடைத்தரகருக்கு லஞ்சமாக கொடுத்து இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு வாங்கித்தர சசிகலா தரப்பு முயன்றுள்ளது.
 
இது தொடர்பான தகவல் டெல்லி லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்ததை அடுத்து அவர்கள் இடைத்தரகர் சதீஷ் சந்திரா என்பரை இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் சசிகலா தரப்பிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாகவும், கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதனையடுத்து இடைத்தரகர் சதீஷ் சந்திராவை டெல்லி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதானா என்பது குறித்தான விசாரணை நடந்து வருகிறது. அது உண்மையாகும் பட்சத்தில் சசிகலா தரப்பில் இருந்து லஞ்சம் கொடுத்தது யார் என்பது தெரியவரும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
 
இந்த விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்படும். இதற்கிடையில் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை நீக்கினால் ஆட்சி கலையும்: விஜயபாஸ்கர் எச்சரிக்கையா?