Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திபாவளிக்கு புதுசட்டை வாங்கித் தர மறுத்த தந்தை… சிறுவன் தற்கொலை!

Advertiesment
திபாவளிக்கு புதுசட்டை வாங்கித் தர மறுத்த தந்தை… சிறுவன் தற்கொலை!
, வெள்ளி, 13 நவம்பர் 2020 (16:44 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு புதுசட்டை வாங்கித் தர மறுத்ததால் சிறுவன் ஒருவன் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கரிக்கலவாக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சுனில் என்ற மகன் உள்ளார். 10 ஆம் வகுப்பு படித்துமுடித்துவிட்டு அதன் பின்னர் மேலே படிக்காமல் கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் சுனில் தந்தை பாலாஜியிடம் தீபாவளி பண்டிகையை கொண்டாட புது சட்டை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி தீபாவளிக்கு முந்தைய நாள் வாங்கி தருகிறேன் எனக் கூற அதிருப்தி அடைந்த சுனில் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது உடலை மீட்ட போலீஸார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாப்பாட்டுக்கு வழியில்லை...இளைஞர் செய்த விபரீதம் ....