Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிகள், விமான நிலையம் போரடித்துவிட்டது. பஸ் ஸ்டாண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Advertiesment
bomb threat

Siva

, வியாழன், 17 அக்டோபர் 2024 (11:33 IST)
பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு கடந்த சில மாதங்களாக பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஒவ்வொரு முறை வெடிகுண்டு மிரட்டல் வரும்போது வெடிகுண்டு நிமிடங்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து சோதனை செய்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

சமீப காலமாக வெளிவந்த அனைத்து வெடிகுண்டு மிரட்டல்களும் புரளி என்பது உறுதியான நிலையில் தற்போது பஸ் ஸ்டாண்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் கொடைக்கானல் சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கிருந்து தான் கொடைக்கானல் செல்வார்கள். அதே போல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் வத்தலகுண்டு வந்து தான் செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த தொலைபேசியில் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது எந்த நேரத்திலும் வெடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உடனடியாக திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கு இது குறித்த தகவல் தெரிவித்த நிலையில் நிலக்கோட்டை டிஎஸ்பி, வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் வத்தலகுண்டு பேருந்து நிலையம் வந்தனர்.

நள்ளிரவு என்பதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பேருந்து நிலையம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுப்பப்பட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே அனுப்பப்பட்டனர். இதனை அடுத்து முழுமையாக பரிசோதனை செய்த பிறகு வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து இந்த புரளியை கிளப்பியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைவருக்கும் 5ஜி திட்டம்! Redmi அறிமுகம் செய்யும் இந்தியாவின் விலை மலிவான 5ஜி ஸ்மார்ட்போன்!