Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் மையம்.. முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம்?

Mahendran
வெள்ளி, 5 ஜனவரி 2024 (16:04 IST)
அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்தின்  மையம் ஒன்று சென்னையில் அமைய இருப்பதாகவும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் உள்ள கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளன

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் உள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சிறு தொழில் துறைகள்  மட்டுமின்றி உலகளாவிய நிறுவனங்கள் சில ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜெர்மனியை சேர்ந்த ஆதிதாஸ் நிறுவனம் சென்னையில் ஒரு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்து ஆசியாவில் அமையும் அடுத்த மையம் இதுதான்.

இந்த நிலையில் அமெரிக்காவின் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் போயிங் நிறுவனத்தின் மையம் சென்னையில் அமைய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர் மாநாட்டில்  கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments