Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ!

Advertiesment
Forest fire

J.Durai

தேனி , செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:55 IST)
தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையை ஒட்டியுள்ள, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான ஒண்டிவீரப்பன் கோயில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மாலைநேரத்தில் பற்றிய காட்டுத்தீயானது ஏக்கர் கணக்கில் பற்றி எரிந்து வருகிறது. 
 
பகல்நேர வெப்பஅலை காரணமாக தீயானது தொடந்து மேல்நேக்கி எரிந்து வருவதால் வனவளங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 
இரவு நேரத்தில் வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தீயானது தொடந்து எரிந்து வருகிறது.
 
இதனால் வனப்பகுதியில் வசிக்கும் பறவையினங்கள் அறியவகை உயிரினங்கள் பாதிப்படைவதோடு வன விலங்குகள், பொட்டிப்புரம்,புதுக்கோட்டை,சூலப்புரம் உள்ளிட்ட மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வனப்பகுதியில் வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு வனத்துறை பணியாளர்களை- காட்டுமாடு முட்டியதில் பலத்த காயம்!.