Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கறுப்பர் கூட்டத்தை விடாத கருப்பாய் பாஜக: வேல் வரைந்து நூதன போராட்டம்!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (13:43 IST)
கறுப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் வேல் வரைந்து கோவை பாஜக இளைஞரணி போராட்டம் நடத்தினர். 
 
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும் இந்து கடவுள் முருகன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இதனைக் கண்டித்து இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை இடையர்பாளையம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமி இல்லம் முன்பு, அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 
பூக்களால் முருகனின் வேல் வரைந்தும், பெண்கள் தங்களது கைகளில் வேலை பல வண்ணங்களால் வரைந்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் முருகன் பாடல்கள் மற்றும் பஜனை பாடல்கள் பாடியும், கறுப்பர் கூட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments