Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிவாலயம் அரசின் முதல் நாள் முதல் லாக்கப் மரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

annamalai
, திங்கள், 27 ஜூன் 2022 (15:51 IST)
அறிவாலயம் அரசின் முதல் நாள் முதல் லாக்கப் மரணம் தொடர்கதையாகிவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல்நிலையத்தில் கையெழுத்துப் போடச் சென்ற 22 வயது இளைஞர் அஜித் என்பவர் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு மரணித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இறந்தவர் குடும்பத்திற்கு தமிழக பாஜகவின் ஆழ்ந்த இரங்கல்கள்.
 
இறந்த இளைஞனின் தாயின் வேதனையைப் போக்க இழப்பீடு மட்டும் போதாது.  அறிவாலயம் அரசு ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது. கட்டுப்பாடின்றி இருக்கிறதா தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்ற சந்தேகத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் எழுப்புகிறது.
 
சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்.
 
இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி கிடையாது: உயர்கல்வித்துறை தகவல்!