Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி தற்கொலை விவகாரம்; விசாரணை செய்ய குழு அமைத்த பாஜக!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (15:38 IST)
தஞ்சை மாவட்டத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை விசாரணை மேற்கொள்ள பாஜக 4 பேர் கொண்ட குழுமை அமைத்துள்ளது.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி லாவண்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை விவகாரத்தில் மாணவியை விடுதியில் அதிக வேலை வாங்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் மதமாற மாணவியை வற்புறுத்தியதாலேயே அவர் இறந்ததாக கூறி பாஜகவினர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மாணவிக்கு நீதி கேட்டு போராட்டமும் நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மாணவியின் வாக்குமூல வீடியோவில் மதமாற்றம் குறித்த தகவல்கள் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவி தற்கொலை குறித்து விசாரணை மேற்கொள்ள மத்திய பிரதேச பாஜக எம்.பி சந்தியாராய் உட்பட 4 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது பாஜக. இந்த தற்கொலை விவகாரம் குறித்த விரிவான அறிக்கையை கட்சிக்கு இந்த குழு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு.! வெள்ளை அறிக்கை வெளியிடுக.! அரசுக்கு ஜி.கே.மணி வலியுறுத்தல்..!

மலேசிய பிரதமரை சந்தித்த நடிகர் கமல்..! என்ன பேசினாங்க தெரியுமா..!!

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments