Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் திலீப்பின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி… கைதுக்கு இடைக்கால தடை!

Advertiesment
நடிகர் திலீப்பின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி… கைதுக்கு இடைக்கால தடை!
, வியாழன், 27 ஜனவரி 2022 (15:33 IST)
மலையாள நடிகர் திலீப் பாலியல் கொடுமை மற்றும் கடத்தல் சம்மந்தப்பட்ட வழக்கில் சிக்கி கைதாகி இப்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

நடிகை பாலியல் வழக்கில் திலீப்பை கைது செய்யப்பட்ட திலீப், இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி ஒருவரை அவர் கொலை செய்ய முயன்றதாக மேலும் ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்பட்டு, அதற்காக அவர் கைது செய்யப்படலாம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்துக்கு செல்ல  ஜனவரி 27 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் திலீப்பிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தை குற்றப்பிரிவுக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து அவர் நேற்று காவல் நிலையத்தில் ஆஜர் ஆன நிலையில் 11 மணிநேரம் அவரிடம் விசாரணை நடந்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக அவர் மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார்.

இந்நிலையில் இன்று அவர் உள்ளிட்ட 6 பேரின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது ஐந்தாவது முறையாக அவரது மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை அவரை கைது செய்வதற்கு இடைக்கால தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ரிலீஸ் ஆகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம்