Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்: பாஜகவின் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (19:07 IST)
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா பெயர் வைத்ததாக வெளிவந்த செய்தியை இன்று காலை பார்த்தோம்
 
இந்த நிலையில் மீதமுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பாஜக தலைவர்களின் பெயர்களை வைக்க வேண்டும் என பாஜக வினர் சென்னை மெட்ரோ அதிகாரிகளிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர் 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களை சந்தித்த பாஜக வின் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் மற்றும் சில நிர்வாகிகள் சென்னை மெட்ரோ நிலையங்களுக்கு எம்ஜிஆர் ஜெயலலிதா பெயர்கள் வைத்தது போலவே மற்ற ரயில் நிலையத்தில் பிரதமர் வாஜ்பாய், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் 
 
சென்னை உள்பட நாடு முழுவதும் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க பாடுபட்டவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்றும் அவரது பெயரை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும், பாரிமுனை ரயில் நிலையத்துக்கு அம்பேத்கர் பெயரையும் வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்து முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments