ஒரு லட்சத்தை நெருங்கிய சென்னை: 2வது நாளாக பலி எண்ணிக்கை 97

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (18:15 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5881 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5881 பேர்களில் 1013 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99794  ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் நாளை ஒரு லட்சத்தை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 97 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3935 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 5778 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 1,83,956 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 58,350 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,60,269 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

திருப்பதி உண்டியல் எண்ணும் மையத்தில் ரூ.100 கோடி முறைகேடு.. புகார் கொடுத்தவர் மர்ம மரணம்..!

72 மணி நேரம் உழைத்தால் தான் சீனாவுடன் போட்டி போட முடியும்: நாராயண மூர்த்தி

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments