Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவங்களுக்கு மட்டும்தான் போராட தெரியுமா! – அழைப்பு விடுக்கும் பொன்னார்!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (13:15 IST)
தமிழகம் முழுவதும் திமுகவை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக பாஜக முன்னால் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ”திமுக குடியுரிமை சட்டத்தை ஆராய்ந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அவர்களை நான் பினந்திண்ணி கழுகுகள் என பேசப்போவதில்லை. ஆனால் அவர்கள் குடியுரிமை சட்டம் பற்றி ஆராயவில்லை.

குடியுரிமை சட்டம் இலங்கை தமிழர்களுக்கு எதிரானது என்று மக்களை திமுக திசை திருப்பி விடுகிறது. இலங்கை தமிழர்கள் பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை. தமிழகத்தின் அழிவு சக்தி திமுக. மாணவர்கள் அவர்களை நம்பி போராட்டம் நடத்தாமல் எங்களுடன் வாருங்கள். திமுகவின் பகல்வேஷத்தை கண்டித்து பாஜக சார்பில் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்.. என்ன காரணம்?

சென்னையில் அடுத்தடுத்து 7 இடங்களில் நகை பறிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

7வது நாளாக தொடர்ந்து உயர்ந்தது இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

5 நாட்களில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments