Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்புமணி ஒரே ஒரு நாள் பாராளுமன்றம் வந்தார், துரோகம் செய்தார்: கனிமொழி ஆவேசம்

அன்புமணி ஒரே ஒரு நாள் பாராளுமன்றம் வந்தார், துரோகம் செய்தார்: கனிமொழி ஆவேசம்
, செவ்வாய், 17 டிசம்பர் 2019 (18:30 IST)
ஒரு நாள் மட்டும் பாராளுமன்றத்திற்கு வந்து, தமிழக மக்களுக்குத் துரோகம் செய்து விட்டார் என அன்புமணி மீது திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று தமிழகமெங்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னையில் நடந்த போராட்டத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டார்
 
இந்த போராட்டத்தில் அவர் பேசியபோது ’பாமக எம்பி அன்புமணியை நாங்கள் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தில் பார்த்ததே கிடையாது. அவர் எப்போதும் தலைமறைவாகவே இருந்து வந்தார். ஆனால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் வாக்கெடுப்பு தினத்தில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டு அந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு சென்றுவிட்டார். இதன் மூலம் அவர் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார்.
 
அதிமுகவினர் மட்டும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால், இந்த மசோதா அமலுக்கு வந்திருக்காது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக அளித்ததன் மூலம் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி இலங்கை மக்களுக்கும் அதிமுக துரோகம் செய்துவிட்டது. இந்த மசோதா காரணமாக உலக நாடுகள் இந்தியாவை அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறது என்று கனிமொழி ஆவேசமாக பேசினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் தொல்லை தந்த தந்தையை ... tதுண்டு துண்டாக வெட்டி கடலில் வீசிய மகள் !