Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீமானுக்கு ஆதரவா பாஜகவுல இருந்து மிரட்டுறாங்க! – விஜயலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு

சீமானுக்கு ஆதரவா பாஜகவுல இருந்து மிரட்டுறாங்க! – விஜயலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு
, வியாழன், 1 அக்டோபர் 2020 (08:30 IST)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நடிகை விஜயலட்சுமி தன்னை அதிமுக – பாஜமுக பிரமுகர்களும் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இடையேயான பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியினர் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாகவும், அதனால் சீமானுக்கு ஆதரவாக பாஜக – அதிமுக பிரமுகர்கள் சிலர் தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், தான் முன்னதாக பாஜகவில் இணைய திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது சீமான் பாஜக கூட்டணி செல்ல இருப்பதால் தனக்கு அடைக்கலம் தரும் அரசியல் கட்சியில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீளாத பொருளாதாரம்; டிஸ்னி எடுத்த அதிர்ச்சி முடிவு! – 28 ஆயிரம் ஊழியர்கள் அதிர்ச்சி!