ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில் ராமர் கோவில் திறந்தவுடன் தினமும் நாடு முழுவதும் இருந்து 50 ஆயிரம் பக்தர்களை ராமர் கோவிலுக்கு அழைத்து வரவேண்டும் என பாஜக மெகா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ராமர் கோவிலை பார்க்க அயோத்திக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருந்தாலும் அவர்களிடம் வசதி இருக்காது என்பதால் ராமர் கோவிலுக்கு செல்ல விருப்பப்படும் பொது மக்களை ஜாதி மத வேறுபாடு இன்றி அழைத்துச் செல்ல வேண்டும் என்று பாஜக பிரமுகர் டால்பின் ஸ்ரீதரன் என்பவர் தான் அது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் பேரை அயோத்திக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என்றும் அதன் முழு செலவையும் பாரதிய ஜனதா ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார்
பக்தர்களுக்கான ரயில் பயண செலவு உணவு தங்குமிடம் மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் பாஜக செல்லும் என்றும் நாடு முழுவதிலும் இருந்து 430 நகரங்களில் இருந்து அயோத்திக்கு பக்தர்களை வரவழைக்க பாஜக தீவிர முயற்சி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்