பாடகி சித்ரா இத்தனை வருட திரை உலக வாழ்வில் எந்த விதமான சர்ச்சை கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருப்பவர் என்பதும் அவர் அனைவருக்கும் நட்புரிமை பாராட்டும் வகையில் இருந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் சமீபத்தில் அவர் ராமர் கோவில் குறித்து கூறிய கருத்தை அடுத்து நெட்டிசன்கள் அவர் மீது தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாடகி சித்ரா சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ராமர் கோவில் பிரதிஷ்டை நடக்கும் தினத்தில் ராம நாமம் ஜெபித்து விளக்கேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோவுக்கு ஆதரவாக சில கருத்துக்கள் மட்டுமே பதிவாகிய நிலையில் திடீரென சித்ராவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் மீம்ஸ்கள் பதிவாகி வருகிறது,.
அரசியல் கட்சி பிரமுகர்களும் அவரது கருத்து குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் சித்ராவுக்கு ஆதரவாகவும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரம்ஜான் நாளில் ரம்ஜானின் புனிதத்தை பற்றி பேசலாம், கிறிஸ்துமஸ் நாளில் யார் வேண்டுமானாலும் கேக் வெட்டலாம். ஆனால் இந்துக்கள் பண்டிகை மட்டும் கருத்து கூறினால் மட்டும் நெட்டிசன் ஏன் பொங்குகிறார்கள் என்று மத்திய அமைச்சர் முரளிதரன் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது