Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 ஆண்டு காலமாக வடை சுடுகிறது பா.ஜ.க! – முதல்வர் மு.க.ஸ்டாலின் Speaking4India Podcast!

Advertiesment
MK Stalin
, திங்கள், 4 செப்டம்பர் 2023 (09:07 IST)
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தபடி இணையத்தில் Speaking4India என்ற போட்கேஸ்டில் முதல் ஆடியோவை வெளியிட்டுள்ளார்.



I.N.D.I.A கூட்டணியில் திமுகவும் உள்ள நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது Speaking4India என்ற புதிய போட்கேஸ்ட் மூலம் மக்களிடையே பேசும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.

அதில் பேசியுள்ள அவர் “கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் உள்ள பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் மக்கள் அதுகுறித்து சிந்திக்க விடாமல் செய்ய மதவாத வன்முறைகளை தூண்டிவிடுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 10 ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றாம் பாஜக வடை சுடுவதாகவும், குஜராத் மாடல் என்ற பெயரில் வந்த நரேந்திர மோடி மாடல் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட பின் அவர்கள் மறந்தும் குஜராத் மாடல் குறித்து பேசுவதில்லை என்றும், மேலும் இந்தியாவின் கட்டமைப்பை பாஜக சீர்குலைத்து விட்டதாகவும் பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை மேம்படுத்த I.N.D.I.A கூட்டணியால் மட்டுமே முடியும் என்றும் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 5 நாட்களுக்கு கனமழை..!