Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நிறுவனங்களில் ரெய்டு – மிரட்டுகிறதா பாஜக ?

ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நிறுவனங்களில் ரெய்டு – மிரட்டுகிறதா பாஜக ?
, திங்கள், 15 ஏப்ரல் 2019 (09:11 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் நிறுவனங்களில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ரெய்டு நடந்திருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் வீடுகளில் கடந்த வாரங்களில் ரெய்டுகள் நடந்தன. இது வருமான வரித்துறையை கையில் வைத்துக்கொண்டு ஆளும் கட்சி நடத்தும் மிரட்டல் நாடகம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் நிறுவனங்கள் சிலவற்றில் கடந்த ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடந்திருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவும் அதிமுகவும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் இந்த சூழ்நிலையில் ஏன் திடீரென முதல்வருக்கு நெருக்கமானவர்கள் இடத்தில் ரெய்டு நடத்தவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்குக் காரணமாக தேர்தல் பணிகளில் அதிமுக காட்டும் சுணக்கமே எனக் கூறப்படுகிறது. மக்களவைத் தொகுதிகளை விட இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியிலேயே அதிமுக கவனம் செலுத்துவதால் பாஜக் கொடுத்திருக்கும் ஷாக் ட்ரிட்மெண்ட் இது என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இது குறித்து டெல்லியில் இருந்து அதிமுக தலைமைக்கு ‘ மக்களவைத் தேர்தலில் அதிக கவனம் செலுத்துங்கள்’ என அழுத்தமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 தொகுதிகளிலும் நமக்கே வெற்றி... வீடியோ வெளியிட்ட கேப்டன்: குதூகலத்தில் தொண்டர்கள்!!!