Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடிஸ்வரர்களுக்கே சீட் – நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்கு !

கோடிஸ்வரர்களுக்கே சீட் – நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்கு !
, திங்கள், 15 ஏப்ரல் 2019 (09:05 IST)
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நிற்கும் முக்கியமான கட்சிகளின் வேட்பாளர்களில் பெரும்பகுதியினர் கோடீஸ்வரர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்னும் 3 நாட்களில் நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் என்றாலே கருத்துக்கணிப்புகளுக்கும் ஆய்வு முடிவுகளுக்கு பஞ்சம் இருக்காது.

வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் ஒருபுறம் வெளியாகிக் கொண்டிருக்க வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் குறித்து ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது தேர்தல் சீர்திருத்தத்திற்கான இயக்கம் என்ற அமைப்பு. அதில் தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகள் ஆகிய வேட்பாளர்களின் சொத்து மதிப்பைக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
webdunia

இந்தக் கட்சிகளை சேர்ந்த194 வேட்பாளர்களில் 140 பேர் கோடிஸ்வரர்களாகும். 54 பேர் மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கும் கம்மியாக சொத்து வைத்திருப்பவர்கள். இதில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவருமே கோடீஸ்வரர்கள்தான். திமுக கூட்டணியில் விசிக-வின் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரும் காங்கிரஸைச் சேர்ந்த ஜோதிமணியும் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் 3 பேரும் கோடீஸ்வரர்கள் இல்லை.

அதிகபட்சமாக நாம் தமிழர் கட்சியின் 25 வேட்பாளர்கள் ஒரு கோடிக்கு குறைவாக சொத்து வைத்துள்ளதாக தங்கள் வேட்புமணுவில் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட மூன்றில் இரண்டு பங்கு வேட்பாளர்கள் கோடிஸ்வரர்களாக இருப்பது தேர்தல் கோடீவரர்களுக்கான இடமாக மாறிவருகிறது என்பது கசப்பான உண்மை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரச்சாரத்திற்கு வருகிறார் விஜயகாந்த் – உற்சாகத்தில் தொண்டர்கள் !