Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிஎஃப் வாசன் மீது பாஜக நிர்வாகி அலிஷா குற்றச்சாட்டு

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (16:13 IST)
டிடிஎஃப் வாசன் மீது  பாஜக நிர்வாகி அலிஷா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி, விபத்துக்குள்ளாகிய  டிடிஎஃப் வாசன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் அவர்  ஜாமீன் மனு தாக்கல் செய்த  நிலையில் அந்த மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில்  அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது  உயர் நீதிமன்றம். இந்நிலையில் வெளியில் வந்துள்ள அவர் தன்னிடம் சர்வதேச ஓட்டுனர் உரிமம் உள்ளதால் தொடர்ந்து பைக் ஓட்டமுடியும் எனக் கூறியிருந்தார். ஆனால், அப்படி பைக் ஓட்ட முடியாது என போக்குவரத்துத்துறை கூறியிருந்தது.

இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் ஒரு வீடியோவில் பேசிய பேச்சுக்கு பாஜக நிர்வாகி அலிஷா குற்றம்சாட்டியுள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘’பெண் என்றாலே இரட்டை அர்த்தத்தில் கொச்சையாகப் பேசி வாயை மூடி விடலாம் என்றும்.பெண்ணை அவமரியாதை செய்து விட்டுத் தப்பித்துவிடலாம் என்று நினைக்கும் இந்த மாதிரி கீழ்த்தரமான, பண்பற்ற, சட்டத்தை மீறுபவர்களை நினைத்தால் அவமானமாகவும், வேதனையாகவும் உள்ளது.

என் மீது அல்லது வேறு எந்தப் பெண் மீதும் இரட்டை அர்த்தத்தில் பேசுவது என்பது உங்கள் சொந்த தாய் மற்றும் சகோதரியிடம் பேசுவது போல் மோசமானது! உங்களைப் போன்ற பண்பற்ற,ஒழுக்கமற்ற,சட்டத்தை மீறுபவர்களை ஆதரிக்கும் அனைவரும் தங்கள் தாய்மார்களும் சகோதரிகளும் பெண்கள் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments