கரூர் கூட்ட நெரிசல்: சி.பி.ஐ. விசாரணை கோரிய பா.ஜ.க. கவுன்சிலரின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது!

Mahendran
வெள்ளி, 3 அக்டோபர் 2025 (12:45 IST)
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது.
 
சென்னை மாநகராட்சி பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்த் தாக்கல் செய்த மனுவில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ.க்கு  மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
 
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் அருள் முருகன் அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை அணுகுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர்.
 
ஏற்கனவே, இதே கூட்ட நெரிசல் வழக்கைச் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரித் தமிழக வெற்றி கழகம் சார்பாகவும் மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி வாக்காளர்களை நீக்கினால் நிர்மலா சீதாராமனை பாராட்ட தயார்: ஆர்.எஸ். பாரதி..!

மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் கிடைத்த வெற்றி: பீகார் குறித்து செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments