இருமல் மருந்தால் 6 குழந்தைகள் பலி! தமிழக மருந்து நிறுவனத்தில் சோதனை!

Prasanth K
வெள்ளி, 3 அக்டோபர் 2025 (12:39 IST)

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் எனப்படும் இருமல் மருந்தை குடித்த 6 குழந்தைகள் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த மருந்து நிறுவனத்தின் காஞ்சிபுரம் ஆய்வகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.

 

மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் இருமல் மருந்து குடித்த 6 குழந்தைகள் பலியான நிலையில், அவர்கள் கோல்ட்ரிஃப் மற்றும் நெக்ஸ்ட்ரோ டிஎஸ் என்ற இருமல் மருந்துகளை உட்கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோல்ட்ரிஃப் மருந்து காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் ஸ்ரீசென் பார்மாவில் தமிழக மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை மேற்கொண்டு, குழந்தைகள் உட்கொண்ட பேட்ச் மருந்துகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அந்த பேட்ச் இருமல் மருந்துகளின் விற்பனையை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இந்த மருந்துகள் விற்பனையாகும் பிற மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments