Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணாமலையை கேள்வி கேட்ட நபரை தாக்கிய பாஜகவினர்?

அண்ணாமலையை கேள்வி கேட்ட நபரை தாக்கிய பாஜகவினர்?

Sinoj

, திங்கள், 8 ஏப்ரல் 2024 (15:33 IST)
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்சாரம் வரும் 17 ஆம் தேதி மாலையுடன் ஓய்கிறது.
 
இந்த நிலையில், தமிழ்நாடு முழுக்க ஆளுங்கட்சியாக திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பிலும் அனல் பறக்கும் பிரச்சாரமும் மேற்கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில், தமிழ் நாட்டில் பாஜக தலைமையில் பாஜக தலைமையில், த.மா.க, பாமக ஆகிய கட்சிகல் இணைந்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் நிலையில் கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிருகிறார்.
 
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி பூமலூரியில் அண்ணாமலை விசைத்தரி பிரச்சனைகளை கூறி வாக்கு சேகரித்தபோது, 10 ஆண்டில் எங்கள் விசைத்தரி தொழில் நாசமடைய காரணமே உங்க பாஜக ஆட்சிதான் என கூறி நபரை அங்கிருந்த பாஜகவினர் தாக்கினர்.
 
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் ’’வாழ்நாள் முழுவதும் கோர்டிற்கு அலைய வைத்துவிடுவேன்’’ என கண்காணிப்பு நிலைக்குழுவினரை மிரட்டியதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.ஆர். பாலு போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுடியில் வெற்றி யாருக்கு?