Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயதாரணி தொகுதி காலி என அறிவித்த சபாநாயகர், பொன்முடி தொகுதியை அறிவிக்காதது ஏன்? பாஜக கேள்வி

Mahendran
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (13:07 IST)
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு அவருடைய விளவங்கோடு தொகுதி காலி என அறிவிக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.
 
ஆனால் அமைச்சர் பொன்முடி சிறை தண்டனை பெற்றதால் எம்எல்ஏ பதவியை இழந்த நிலையில் அவருடைய தொகுதி காலி என இன்னும் அறிவிக்கப்படவில்லை, அது ஏன்? என பாஜகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்

இதுகுறித்து பாஜகவின் நாராயணன் திரிபாதி கூறியபோது, ‘இரு நாட்களுக்கு முன்னர் விஜயதரணி ராஜினாமா செய்த விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் காலியான திருக்கோவிலூர் தொகுதியை 'காலி' என அறிவிக்க தாமதம்,  தயக்கம்  ஏன்?

மீண்டும் தொகுதியில் தலை காட்ட  தி மு க வுக்கு பயமா? அ‌ல்லது பாஜக வின்  A.G. சம்பத் அவர்களின் மீதான அச்சமா? தைரியமிருந்தால், திராணியிருந்தால் பொன்முடி ம‌ற்று‌ம் ஸ்டாலின் தேர்தலை சந்திக்கவும்’ என்று பதிவு செய்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments