Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்: அண்ணாமலை

Advertiesment
annamalai
, வியாழன், 23 ஜூன் 2022 (19:44 IST)
எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
ஒட்டன்சத்திரத்தில், உணவுத்துறை அமைச்சர் திரு சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு  பழனி கனகராஜ் அவர்களின் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது த்மிழக பாஜக.
 
இந்நிலையில், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது 
அறிவாலயம் அரசு. 
 
கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக பாஜக செய்து வருகிறது.
 
எங்கள் நிர்வாகிகள் சிறையிலிருந்து வெளியே வரும்போது அவர்களை வரவேற்க 
தமிழக பாஜக தயாராக இருக்கும்.  பார்த்துக் கொண்டிருக்கிறோம்,  பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்
 
இவ்வாறு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டாசு ஆலையில் விபத்தில் மூவர் பலி: பாமக தலைவர் இரங்கல்