Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க. பிரமுகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.. ரவுடிக்கு கள்ளத்துப்பாக்கி கொடுத்தாரா?

Siva
வெள்ளி, 5 ஜூலை 2024 (09:50 IST)
பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில் அலெக்சிஸ் சுதாகர் ஏற்கனவே சிறையில் உள்ளார். இந்த நிலையில் அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன
 
இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் அலெக்சிஸ் சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் இப்போதைக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
மாமல்லபுரம் அருகே சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவிடம் இருந்து தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கியது அலெக்சிஸ் சுதாகர் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments