Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

BJP Minister Resign

Senthil Velan

, வியாழன், 4 ஜூலை 2024 (13:30 IST)
தான் பிரச்சாரம் செய்த மக்களவை தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்ததால், ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில், 7 மக்களவை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என கிரோடி லால் மீனா கூறியிருந்தார்.
 
அவரது சொந்த தொகுதியான தௌசா உட்பட நான்கு தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர்,  தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே,  தனது அமைச்சர் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார்.
 
கிரோடி லால் அலுவலகத்துக்கு வராததால் அவர் துறை சார்ந்த பட்ஜெட் திட்டங்களை இறுதி செய்வதில் தாமதம் ஆனது. இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அமைச்சர் கிரோடி லால் மீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 
10 நாட்களுக்கு முன்பே தனது ராஜினாமா கடிதத்தை கிரோடி லால் மீனா கொடுத்துவிட்டதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!