இன்று முதல் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ள நிலையில் வகுப்பறைகளை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வரும் நிலையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடந்து வந்தன. இந்நிலையில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க பள்ளிகளை திறப்பது அவசியம் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் வகுப்பறைகளை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதனால் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் முதற்கட்டமாக பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.