தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் புறப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் அதிமுக – பாஜக இடையே நேற்று முதலாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை பாஜக கேட்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தை முடிவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலம் புறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் கட்சியின் மற்ற நிர்வாகிகள் கூட்டணி குறித்து இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.