5,000 பேருக்கு பிரியாணி விருந்து: செந்தில் பாலாஜி விடுதலையை கொண்டாடிய தொழிலதிபர்!

Mahendran
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (16:42 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று விடுதலையான நிலையில் அதனை திமுக தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் கரூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 5000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்து கொண்டாடியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தோகை முருகன் என்ற தொழில் அதிபர் திமுகவின் அனுதாபி என்றும் குறிப்பாக செந்தில் பாலாஜி என் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஜாமீனில் செந்தில் பாலாஜி விடுதலை ஆன நிலையில் இவர் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இன்று காலை முதல் பிரியாணி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் சுமார் 5000 பேர் வரை இதுவரை பிரியாணி சாப்பிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

750 கிலோ அரிசி, 1500 கிலோ கோழிக்கறி, 5000 முட்டைகள் என பிரியாணி தயாரிக்கப்பட்டதாகவும் பத்தாயிரம் தண்ணீர் பாட்டில்கள் வரவழைக்கப்பட்டு விருந்து தடபுடலாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது,

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் தோகை முருகன் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குற்றவாளிகள் குஷி... பீதியில் மக்கள்!. இதுதான் நிலை!.. எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்!...

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments