Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டணிக்கு வலை விரிக்கும் பெரிய கட்சிகள்! டிசம்பரில் முக்கிய முடிவு எடுக்கும் விஜய்!?

Advertiesment
TVK Vijay

Prasanth Karthick

, திங்கள், 21 ஏப்ரல் 2025 (11:26 IST)

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள், கூட்டணி பேச்சுவார்த்தை என பரபரப்பாகி வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், திமுக - தோழமை கட்சிகளிடையேயும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் எழத் தொடங்கியுள்ளன.

 

இந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்தான். சமீபத்தில் தவெகவில் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலர் இணைந்துள்ள நிலையில் தேர்தலை நோக்கி தவெக தீவிரமாக செயலாற்றி வருகிறது. மேலும் தவெக கூட்டணி அமைக்கவும் தயாராக உள்ளதாக ஏற்கனவே விஜய், தவெக மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

 

இதனால் சில முக்கிய அரசியல் கட்சிகள் தவெகவிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. ஆனால் விஜய் இப்போதே கூட்டணி பற்றி பேசுவதை தவிர்த்து வருகிறாராம். தற்போது தவெகவை பூத் கமிட்டி முதற்கொண்டு அனைத்து வகையிலும் வலுவாக்கும் நடவடிக்கையில் அவர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அக்டோபர் தொடங்கி பல மாவட்டங்களிலும் தவெக கட்சி கூட்டங்கள் நடக்க இருப்பதாகவும், விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

அதனால் டிசம்பருக்கு பின்னர் கூட்டணிக்கான கதவுகளை திறக்க தவெக திட்டமிட்டு வருகிறதாம். மேலும் கூட்டணிக்கு வரும் கட்சிகள் தவெகவின் தலைமையில் செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தவெக தலைமையிலான கூட்டணி கட்சி என்ற நிலைபாட்டிற்கு சில சிறு கட்சிகள் தயாராக இருப்பதாகவும், விஜய்யின் அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெகவின் அடுத்த மூவ்.. கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கு! - நேரில் கலந்து கொள்ளும் விஜய்!