Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடியின் நலத்திட்டங்களால் பயன்பெற்றதை, மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.- அண்ணாமலை

பிரதமர் மோடியின்  நலத்திட்டங்களால் பயன்பெற்றதை, மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.- அண்ணாமலை
, திங்கள், 31 ஜூலை 2023 (20:15 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்  ‘’என் மண் என் மக்கள் ‘’ பாத யாத்திரை ராமேஸ்வரத்தில்  நடந்து வரும் நிலையில் ‘திருவாடானை அழியாதான்மொழி கிராமசபைக் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு  பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் பொதுமக்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த யாத்திரையின் தொடக்க விழாவிற்கு என்டிஏ கூட்டணியில் முக்கிய  தலைவர்கள் விருந்தினர்களாக அழைப்பட்ட நிலையில்,  மத்திய அமைச்சர் அமித்ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணாமலையில் யாத்திரை தொடக்கவிழா நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

அண்ணாமலையில் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் நிலையில், அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீட்டிற்குச் சென்று அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜக  தொண்டர்களை சந்தித்து வருகின்றனர்.

 இந்த நிலையில் இன்று திருவாடானை அழியாதான்மொழி கிராமசபைக் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு  பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் பொதுமக்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’கூட்டத்தில் மிகவும் ஆர்வமாகக் கலந்து கொண்ட பொதுமக்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி  அவர்களின் நலத்திட்டங்களால் பயன்பெற்றதை, மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்ற மகாத்மா காந்தியின் மொழிகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் கிராம சபைகள், வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையையும், பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துவதையும் சிறப்பாகச் செய்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள் - எடப்பாடி பழனிசாமி