Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும்: ரஜினி கருத்து குறித்து பாரதிராஜாவின் அறிக்கை

தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும்: ரஜினி கருத்து குறித்து பாரதிராஜாவின் அறிக்கை
, வெள்ளி, 13 மார்ச் 2020 (15:34 IST)
ரஜினி கருத்து குறித்து பாரதிராஜாவின் அறிக்கை
சூப்பர் ஸ்டார் ரஜினியை அரசியல்ரீதியாக அதிகம் விமர்சனம் செய்தவர்கள் இருவர். ஒருவர் சீமான், இன்னொருவர் பாரதிராஜா. நேற்று சீமான், ரஜினியின் அரசியல் கொள்கைகளுக்கு ஆதரவு என தெரிவித்த நிலையில் இன்று இயக்குனர் பாரதிராஜாவும் தனது ஆதரவை அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளார். தன்னை அதிகமான அளவில் விமர்சனம் செய்தவர்களும் பாராட்டும் வகையில் கொள்கை அமைப்பதுதான் ஆன்மீக அரசியல் என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் கொள்கைகள் குறித்து பாரதிராஜாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்தச் சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட, 'ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன்.
 
இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது. தமிழன் தான் ஆட்சிக்குத் தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.
 
ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாகக் கூட இருக்கலாம்.
 
ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் 'நாணய அரசியலில்' அதன் முதல் பக்கத்திலேயே ஒரு தமிழனை 'அரசனாக' ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற மனிதத்தை, கொள்கைகளாகப் பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்”
 
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் எதிரொலி: நேபாளம் எடுத்த அதிரடி முடிவு