கொரோனா வைரஸ் எதிரொலி: நேபாளம் எடுத்த அதிரடி முடிவு
சீனா உள்பட உலகின் 125 நாடுகளில் கொரோனா பரவி மனித இனத்தையே அழித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த வைரசால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸிலிருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளம், கொரோனா வைரஸ் எதிரொலியாக இமயமலையில் மலையேற்றத்தை தடைசெய்துள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகும் வரை இமயமலைக்கு மலையேற்றம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை என்று நேபாள நாட்டு அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மலையேற்ற வீரர்கள், வீராங்கனைகள் அதிருப்தி அடைந்தாலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் மலையேற்றத்தை சில நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது