Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்: 'மீ டு' குறித்து பாரதிராஜா

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (21:39 IST)
வைரமுத்து மீது குற்றஞ்சாட்டும்போதே சின்மயி தெளிவாக கூறிய விஷயம் ஒன்று 'இந்த விஷயத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லை. இது நடந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போது செல்போனே ஒருசிலரிடம் தான் இருந்தது. இதை தவிர பாஸ்போர்ட் முத்திரை மட்டும் ஆதாரமாக உள்ளது. வேறு எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து இதற்கெல்லாம் ஆதாரம் எங்கே? உண்மை என எப்படி நம்புவது? என்று தொடர்ந்து ஒருசிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

'ஆதாரம் எங்கே? ஏன் இத்தனை வருடம் வெளியே சொல்லவில்லை? என வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசும் பலர் வைரமுத்து அவ்வாறு செய்திருக்க மாட்டார் என இன்னும் ஒருவர் கூட கூறவில்லை குறிப்பாக வைரமுத்துவின் இரு மகன்கள் உள்பட அவரது குடும்பத்தினர் கூட வைரமுத்துவுக்கு ஆதரவாக இன்னும் ஒரு கருத்தை கூட கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'மீ டூ' பிரச்சனை குறித்து இயக்குனர் பாரதிராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'மீ டூ' பற்றி கேள்விப்படுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது; ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்' என்று கூறியுள்ளார். பாரதிராஜாவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments