Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீடூ குற்றம் சுமத்திய பெண் மீது வழக்கு தொடா்ந்தாா் எம்.ஜே.அக்பா்

Advertiesment
மீடூ குற்றம் சுமத்திய பெண் மீது வழக்கு தொடா்ந்தாா் எம்.ஜே.அக்பா்
, திங்கள், 15 அக்டோபர் 2018 (16:03 IST)
அண்மையில் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். 
 
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பிரியா ரமணி என்ற பத்திரிக்கையாளர் பாலியல்  புகார் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ஏறக்குறைய 40 ஆண்டு கால பத்திரிகை அனுபவம் கொண்டவர். பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் தன்னுடைய பதவிக் காலத்தில் இந்த பெண் பத்திரிகையாளரிடம்  தவறாக நடந்துகொண்டதாக சிலா் மீ டூ (MeToo) என்ற ஹேஷ்டேக்கில் குற்றம் சாட்டியிருந்தனா். நைஜீரியாவில் தங்கியிருந்த அக்பா் பதவி விலகக் கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. 
 
இந்நிலையில் நேற்று இந்தியா வந்த அக்பா் அறிக்கை ஒன்றை வெளியிட்டாா். அந்த அறிக்கையில் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. மேலும் பொதுத்தோ்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது என்மீது இந்த குற்றச்சாட்டை உள்நோக்கத்தோடு முன்வைக்கின்றனர். 
 
என்மீதான இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க  பொய்யானவை, இந்த புகாரை நான் சட்ட ரீதியாக எதிா்கொள்வேன் என்று எம்.ஜே.அக்பா் தொிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சர்ஜிக்கல் கெத்து’ இந்தியாவுக்கே மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான்...