Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடுப்போ ஒரு உடுக்கை ; மார்போ ஒரு படுக்கை: வைரமுத்து எழுதிய கவிதை?

Advertiesment
இடுப்போ ஒரு உடுக்கை ; மார்போ ஒரு படுக்கை: வைரமுத்து எழுதிய கவிதை?
, திங்கள், 15 அக்டோபர் 2018 (20:27 IST)
வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை தைரியமாக கூறி பூனைக்கு மணி கட்டிய நிலையில் சின்மயியை தொடரந்து பலர் வைரமுத்து மீது தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேச முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஒரு பெண் ஆடியோ வடிவில் வைரமுத்து தனது தோழிக்கு நிகழ்ந்த ஒரு பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். இந்த ஆடியோவை பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த ஆடியோவில் அந்த பெண் கூறியதாவது

வைரமுத்து  அவர்களே, ஒரு 24 வயது பெண் உங்கள் மீது வைத்திருந்த மரியாதையால் உங்களிடம் ஆட்டோகிராப் கேட்க வந்தார். அவரிடம் மொபைல் எண்ணை வாங்கி கொண்ட நீங்கள் இரவில் போன் செய்து அந்த பெண்ணுக்காக ஒரு கவிதை எழுதியுள்ளதாக கூறினீர்கள். அந்த கவிதையை நான் ஞாபகப்படுத்துகிறேன். அந்த கவிதை இடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு படுக்கை என்ற வரியில் ஆரம்பிக்கும். இப்போது இந்த கேவலமான கவிதை உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கும் என நினைக்கின்றேன். அன்றைய இரவு அந்த பெண் எப்படி துடித்தார் என்று எனக்கு மட்டுமே தெரியும

webdunia
சின்மயி அவர்களே, நீங்கள் தைரியமாக கூறிய பின்னர்தான் நாங்களும் இதனை தெரிவிக்கின்றோம். நாம் எல்லோரும் இணைந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அந்த பெண் ஆடியோவில் கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்லக்கண்ணுவுடன் சந்திப்பு: கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறாரா திவ்யாசத்யராஜ்?