Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலையில் அடித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே : சு.ப.உதயகுமாரன் கோபம்

தலையில் அடித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே : சு.ப.உதயகுமாரன்

Advertiesment
தலையில் அடித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே : சு.ப.உதயகுமாரன் கோபம்
, வியாழன், 1 செப்டம்பர் 2016 (15:36 IST)
தமிழகத்தில் பெண்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது பற்றி பச்சை தமிழகம் கட்சி நிறுவனரும், கூடங்குளம் போராட்டாக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான சு.ப.உதயகுமாரன் வேதனை தெரிவித்துள்ளார்.



இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி நிம்மதியாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. மதுரை சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா, திருச்சி மோனிகா கொலைச் செய்திகளைப் படித்துவிட்டு மனது துடியாய் துடிக்கிறது. என்ன நடக்கிறது இந்த நாசமாய்ப் போன தமிழகத்தில்?

முதல்வரோ, அமைச்சர்களோ, மூத்த அதிகாரிகளோ இப்படி ஒரு பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதில்லை, ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, எதுவும் பேசுவதில்லை.

சட்டமன்றத்தில் தங்கள் தலைவிக்குப் புகழாரம் சூட்டுவதும், வீணாகப் பேசுவதும், வெளிநடப்பு செய்வதும்தான் நடக்கிறது.

சினிமாக்காரர்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் யாரின் எதைக் காட்டினால் எனக்குப் பணம் வரும் என்றே சிந்திக்கின்றனர், செயல்படுகின்றனர்.

கல்லூரிகளில், பள்ளிகளில் பிள்ளைகளை வெறும் இருக்கைகளாகப் பார்ப்பதும், பணம் பறிப்பதும், அவர்களின் தேவைகளை முழுக்கப் புறக்கணிப்பதும், அவர்கள் வாழ்க்கைக்கு உதவாத கல்வியைக் கொடுப்பதும், தங்கள் வர்த்தகத்துக்கு ஏதுவான மதிப்பெண் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதும்தான் நடக்கிறது.

காவல்துறையில் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானவர்களை பாதுகாப்பதும், வேண்டாதவர்களுக்கு எதிராக கதை வசனம் எழுதுவதும், அவர்களை கஷ்டப்படுத்துவதும்தான் நடக்கிறது.

பெரும் முதலாளிகளும், அரசு அதிகாரிகளும் எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்று சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாவம், நமது மகன்களுக்கு வழிகாட்டுவாரில்லை. நமது மகள்களுக்கு பாதுகாப்பே இல்லை. என்ன செய்வது?

தலையில் அடித்துக்கொண்டு அழுங்கள் தமிழர்களே!

என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோ சேவையை பெரும் ஸ்மார்ட்போன் மாடல்களை தெரியுமா??? தெரிஞ்சிகோங்க....