ஜல்லிக்கட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத்தை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என்றும் நீதியை தவறவிட்டு உள்ளது என்றும் பீட்டா அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்த்த விரிவான ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றம் பரிசீலிக்க தவறிவிட்டது என்றும் பீட்டா அமைப்பு கூறியுள்ளது.
இதனை அடுத்து ஜல்லிக்கட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மீண்டும் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.