ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா.. உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு தாக்கல்..!

Siva
புதன், 10 ஜூலை 2024 (14:05 IST)
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்து விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை கடந்த மே 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி  விலங்கு நல வாரியம், பீட்டா அமைப்புகள் தற்போது புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளது. 
 
மேலும் இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க  கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா  முறையீடு செய்துள்ளார்.  இதனையடுத்து மனுக்களை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க  தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளதாக ச்ய்தி வெளியாகியுள்ளது.
 
முன்னதாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு மே 18ஆம் வழங்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது, ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
 
இந்த தீர்ப்பில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம், ஆனாலும் இந்த விளையாட்டின்போது நேரும் துன்புறுத்தல்களைத் தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments